< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை
|23 Jun 2023 12:08 AM IST
அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. அறந்தாங்கி நகரில் 2 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் 10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். பல கோடி ரூபாய் வரவு, செலவு நடைபெறும் இந்த வங்கியில் நேற்று காலை சேலத்தில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 11 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது. அதிகாரிகள் வங்கியின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். எதற்காக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.