< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு
|11 Jan 2024 9:20 AM IST
பங்களா கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்,
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கரூரில் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பங்களா கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூர்-நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களா கட்டி வருகிறார்.