< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
15 மாநிலங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மாமல்லபுரம் வருகை
|18 Nov 2023 4:23 AM IST
15 மாநிலங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 80 பேர் 2 சொகுசு பஸ்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர்.
மாமல்லபுரம்,
தமிழ்நாடு, குஜராத், டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், ஒடிசா, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 15 மாநிலங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 80 பேர் 2 சொகுசு பஸ்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் அங்குள்ள அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அனைத்து மாநில வருமான வரித்துறை அதிகாரிகளும் சிற்பங்கள் முன்பு குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.