விருதுநகர்
4 பெட்டிகளில் நகை, பணம், ஆவணங்களை எடுத்துச்சென்ற வருமானவரி அதிகாரிகள்
|தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனை நேற்று இரவில் நிறைவு அடைந்தது. அப்போது, 4 பெட்டிகளில் நகை, பணம், ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.
அருப்புக்கோட்டை,
தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனை நேற்று இரவில் நிறைவு அடைந்தது. அப்போது, 4 பெட்டிகளில் நகை, பணம், ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.
2-வது நாளாக சோதனை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான செய்யாத்துரையின் வீடு மற்றும் அவரது மகன்களின் வீடுகளில் நேற்று 2-வது நாளாக மதுரை, திருச்சி மற்றும் நெல்லையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள்
அப்போது, சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நிறுவனம் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கி மற்றும் ஆவணங்களில் உள்ள கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளது.
சோதனையின் முடிவில் 4 பெட்டிகளில் பணம், தங்கநகை, லேப்டாப், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.