< Back
மாநில செய்திகள்
வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!
மாநில செய்திகள்

வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!

தினத்தந்தி
|
20 Jun 2023 10:33 AM IST

சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அசோக் குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு 20-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சம்மன் அனுப்பியும் 2-வது முறையாக இன்றும் ஆஜராகவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பு கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




மேலும் செய்திகள்