தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
|வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை,
தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை, உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.