சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
|சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில்,
சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.