< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
|20 July 2022 11:18 AM IST
மதுரையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களான ஜெய பாரத் சிட்டி, கிரீன் சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.