< Back
மாநில செய்திகள்
வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் நாடகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
மாநில செய்திகள்

வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் நாடகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தினத்தந்தி
|
3 Nov 2023 1:56 PM IST

மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"இன்று 28 மசோதாக்கள் காத்திருக்கிறது. அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள அரசு நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது. மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளது.

இது ஒரு அரசியல் நாடகம். பாரதிய ஜனதாவினர் அவர்களை பற்றியும், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கும் பொருந்துமா? என்று பார்க்க வேண்டும். ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்