< Back
மாநில செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை
மாநில செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

தினத்தந்தி
|
27 Sept 2023 8:57 AM IST

ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் காலை 8 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ப்ளெக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்