< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரி சோதனை - ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு?
|15 Oct 2022 12:11 AM IST
புதுக்கோட்டையில் அரசு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அரசு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை என்பவரது வீட்டில் வருமான வரி சோதனை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது வருமானவரி சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் ஏராளமான நகைகள், ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் 80 அட்டை பெட்டிகளில் பேக்கிங் செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.