< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு
|3 Jan 2024 5:06 PM IST
மயிலாடுதுறை மாவட்டத்தை வேளாண் மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
கடந்த 2020 பிப்ரவரியில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.