< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு இடங்களில் சம்பவம்: போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வெவ்வேறு இடங்களில் சம்பவம்: போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
8 July 2023 3:51 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரிடம் கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டில் எலக்ட்ரிஷியன் வேலை பார்ப்பதற்காக வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது 25) என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததாகவும், கடந்த மாதம் 23-ந்தேதி தன்னை லோகேஷ் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் நேற்று முன்தினம் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லோகேஷ் மீது புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கார்த்திகா லோகேஷ்சை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இதைபோல திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் தீனா என்கிற தீனதயாளன் (வயது 23). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் போரில் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்