< Back
மாநில செய்திகள்
தொடர் மழை: நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மாநில செய்திகள்

தொடர் மழை: நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
7 July 2023 1:37 AM GMT

தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அமிரித் உத்தரவிட்டுள்ளார்

மேலும் செய்திகள்