< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் மழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
|6 July 2022 1:17 PM IST
தொடர் மழை எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளா,
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த வகையில் தற்போது கேரள மாநலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 127 அடியாகி உள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 127.40 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142), நீர் இருப்பு, 4,201 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,904 அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,655 கன அடியாகவும் இருந்தது.