< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
|4 Aug 2022 9:52 PM IST
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து நேற்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் அருவி பகுதிக்கும், சுருளி ஆற்றங்கரையோரமும் பொது மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் அறிவித்தனர். இதேபோல் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்ததால் அங்குள்ள ஏரிகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது.