< Back
மாநில செய்திகள்
தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
8 Nov 2023 11:05 AM IST

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தளமாக விளங்கும் இந்த சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த அருவியில் குளிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்