< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர்மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை
|22 Dec 2023 12:50 AM IST
கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி,
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு முற்றிலும் குறையாததால், பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.