< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி:  முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
தேனி
மாநில செய்திகள்

மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

தினத்தந்தி
|
5 Sep 2022 5:01 PM GMT

மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீராதாரமாக அணை விளங்குகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சுருளி அருவி, கும்பக்கரை, கொட்டக்குடி, மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று வரை அணையில் இருந்து வினாடிக்கு 1866 கனஅடிதண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் இன்று தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.

மின் உற்பத்தி

இதனால் லோயர்கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இதற்கிடையே 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால் இன்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 3 ஜெனரேட்டர்கள் மூலம் 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 136.55 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,712 கனஅடியாகவும் இருந்தது.

மேலும் செய்திகள்