< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் விடாது பெய்யும் கனமழை... அடையாறில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்
|4 Dec 2023 11:47 AM IST
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னை,
'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில், பல இடங்களில் பெய்துவரும் மழைநீர், அடையாற்றில் கலப்பதால் அடையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.