< Back
மாநில செய்திகள்
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்
மாநில செய்திகள்

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்

தினத்தந்தி
|
22 Aug 2024 12:13 PM IST

120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.25,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அவர் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரூ.5.12 கோடியில் 10,000 சதுர அடியில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்