< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை

27 April 2023 2:01 AM IST
30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிலும் ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நகராட்சியில் உரிய காலத்தில் வரி செலுத்துவோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தங்களின் 2023- 24 முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.