< Back
மாநில செய்திகள்
சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம்
அரியலூர்
மாநில செய்திகள்

சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம்

தினத்தந்தி
|
21 April 2023 1:06 AM IST

அரியலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84 (1) ல், சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கலெக்டர் ரமணசரஸ்வதி கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்