செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
|திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, என குளிர்ச்சி தரும் பொருட்களை வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே பொதுமக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளரும், மதுராந்தகம் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், நூங்கு, கூழ், குளிநீர்பானங்கள் வெள்ளேரிக்காய், தர்பூசணி, என குளிர்ச்சி தரும் பொருட்களை வழங்கினர்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், ஒன்றிய செயலாளர்கள் ரைஸ் மில் செல்வம், விஜயரங்கன், மாமல்லபுரம் ராகவன், பேரூராட்சி செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணூர் பக்தவச்சலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பையனூர் குமார், மாவட்ட மீனவரணி செயலாளர் கவிஞர் கா.கலியபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜி.கே.பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ், அம்மா பேரவை துணைச் செயலாளர் மோகன்ராஜ் ஒன்றிய கவுன்சிலர் அருள்பிரகாஷ் நிர்வாகிகள் அரிதாஸ், ராமச்சந்திரன், பிரபாகரன், கெங்காதரன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.