காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
|காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை ஏற்பாட்டின் பேரில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு இந்த தண்ணீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, நுங்கு நீர், மோர், ஆரஞ்சு, சாத்துக்குடி, ஐஸ்கிரீம் போன்றவற்றை வழங்கினார்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அ.தி.மு.க. நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.