< Back
மாநில செய்திகள்
தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தினத்தந்தி
|
20 April 2023 2:16 AM IST

அம்பை பிரம்மதேசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

அம்பை:

இல்லம் தேடி கல்வி சார்பாக பிரம்மதேசம் முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அம்பாசமுத்திரம் வட்டார வளமைய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அம்பை ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம் சங்கர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில் வார்டு உறுப்பினர் தேன்கனி, முன்னாள் அம்பை ஒன்றிய துணை தலைவர் சங்கர நாராயணன், ஊராட்சி மன்ற எழுத்தர் வின்சென்ட், டி.டி.டி.ஏ. பள்ளி தலைமை ஆசிரியை கீதா சுர்லின், தன்னார்வலர்கள் சோனியா, கார்த்திகா, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்