< Back
தமிழக செய்திகள்
குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு
காஞ்சிபுரம்
தமிழக செய்திகள்

குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு

தினத்தந்தி
|
14 July 2023 4:13 PM IST

குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக செந்தாமரைகண்ணன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டார்.

குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் இந்த கோவிலுக்கு 5 அறங்காவலர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தலை காஞ்சீபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் லட்சுமிகாந்த பாரதிதாசன் கோவில் வளாகத்தில் நடத்தி வைத்தார். அறங்காவலர் குழு தலைவராக செந்தாமரைகண்ணன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டார். சரவணன், குணசேகர், சங்கீதா, ஜெயக்குமார் ஆகியோர் அறங்காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும் கோவில் கருவறையில் சாமி முன்பு நின்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகிகளும், பணியாளர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்