< Back
மாநில செய்திகள்
சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

தினத்தந்தி
|
16 Oct 2022 2:46 PM IST

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு திறந்து வைத்தார்.

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்புசெங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னியநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் முன்னிலையில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு திறந்து வைத்தார். அப்போது சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்