< Back
தமிழக செய்திகள்
புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
தென்காசி
தமிழக செய்திகள்

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

கடையம் அருகே புதிய அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது.

கடையம்:

கடையம் யூனியன் கீழக்கடையம் பஞ்சாயத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.61 லட்சத்தில் அங்கன்வாடி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமை தாங்கி இதனை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சக்திவேல், ஊராட்சி உறுப்பினர்கள் ஏஞ்சல் மேரி, பரமசிவன், சமுத்திரக்கனி, காளியம்மாள், வீர சுமதி, செல்வகுமார், வயலட் அல்லேலுயா வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்