கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு
|கள்ளக்குறிச்சியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 87 லட்சம் மதிப்பில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை வரவேற்று புதிதாக திறக்கப்பட்ட கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், ஒன்றியக்குழு துணை தலைவர் விமலா முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், வெங்கடாசலம், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான ரவிக்குமார், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளருமான ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சங்க தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.