விழுப்புரம்
வகுப்புகள் தொடக்க விழா
|செஞ்சி ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா
செஞ்சி
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லூரியில் 7-வது தொகுப்பு டி.பார்ம், 4-வது தொகுப்பு பி.பார்ம், 5-வது தொகுப்பு டி.எம்..எல்.டி. ஆகிய வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் வக்கீல் ரங்க பூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். முதல்வர் டாக்டர் ராஜேஷ் வரவேற்றார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். அப்போது கல்லூரியின் கட்டுப்பாடுகள், மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு குறித்து எடுத்துக் கூறினார்கள்.
மேலும் தாளாளர் பேசும்போது, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிலையில் எந்த மாணவர்களும் எந்த ஒரு பிரச்சனைகளிலும் தற்கொலை முடிவு எடுக்க கூடாது என கூறி அதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மோகன்ராஜ், இம்ரான்கான், சீனிவாசன், அருண்குமார், லில்லி ஜூடி, பாலமுருகன், ராஜேஷ், கலைப்பிரியா, வள்ளி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் கண்ணபிரான் நன்றி கூறினார்.