< Back
மாநில செய்திகள்
பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா
திருவாரூர்
மாநில செய்திகள்

பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. பயிற்சியை திருவாரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கா.சித்ரா குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியாளர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தின் கண்காணிப்பாளர்கள் மு.குமரசாமி, ஜான் அலெக்சாண்டர் மேலாண்மை நிலைய முதல்வர் பிரான்சிஸ் சேவியர், விரிவுரையாளர்கள் அப்பாராஜ், அசோக்குமார், நடராஜன், திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் வளர்ச்சி அலுவலர் பா.மாலா மற்றும் மேலாளர் க.ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்