< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தாய்ப்பால் வார தொடக்க விழா
|2 Aug 2023 12:30 AM IST
தாய்ப்பால் வார தொடக்க விழா நடைபெற்றது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் அருண் மற்றும் உறைவிட மருத்துவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தாய்ப்பால் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர்கள் முருகேச லட்சுமணன், ஜெய கிருஷ்ணா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜவகர் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் டாக்டர் பிரியங்கா நன்றி கூறினார்.