< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
செங்கோட்டையில் ரூ.53 லட்சத்தில் புதிய சாலை திறப்பு விழா
|22 Oct 2023 12:15 AM IST
செங்கோட்டையில் ரூ.53 லட்சத்தில் புதிய சாலை திறப்பு விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் நீராத்துலிங்கம் 2-வது தெருவில் (12-வது வார்டு) ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். அவர் அந்த பகுதி பொதுமக்களை வைத்து புதிய சாலையை திறந்து வைக்க செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளா் ஞானராஜ், நகர செயலாளா் கணேசன், துணைச் செயலாளா் பூசைராஜ், நகர்மன்ற உறுப்பினா் முத்துபாண்டி, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் சக்திவேல், வக்கீல் சத்யசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.