< Back
மாநில செய்திகள்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 2:16 AM IST

பாளையங்கோட்டையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் பாளையங்கோட்டை கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வதால் அலுவலக சாவியை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை கட்டாயப்படுத்தி எம்.எஸ்.சி., ஏ.ஐ.எப்.திட்டத்தை செயல்படுத்த நிர்பந்திக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மாரியப்பன், துணைத் தலைவர்கள் நடராஜர் கண்ணன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு வங்கிகளும் மூடிக்கிடந்தன.

மேலும் செய்திகள்