< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா; காஞ்சீபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா; காஞ்சீபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

தினத்தந்தி
|
12 Sep 2023 4:50 AM GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விழா நடைபெற இருக்கும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி காலை 10 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் அவர் பிறந்தநாளில் இந்த சிறப்பு திட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது,

விழா நடைபெறும் இடத்தில் மேடை, துறைகளின் சார்பில் அமைக்கப்படும் கண்காட்சி, பயனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அமைக்கப்படவுள்ள அரங்கின் விவரங்கள் குறித்து அலுவலர்களுடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்