< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று புதைத்த பெண் - அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று புதைத்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
19 Jun 2023 1:41 PM IST

கள்ளகாதலனோடு சேர்ந்து கனவனை மனைவி கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருப்பானந்தாள் பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னையில் தங்கியிருந்து, அங்குள்ள டீ கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இதில் வரும் சம்பளத்தை மாதம் மாதம் வீட்டிற்க்கு அனுப்பி வந்துள்ளார். மேலும் நேரம் கிடைக்கும் போது வீட்டிற்க்கு வந்து குழந்தைகளை பார்த்து வந்திருக்கிறார். இவ்வாறு வீட்டிற்க்கு வரும் போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்ப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

கடந்த மாதம் கோவில் திருவிழாவிற்க்காக பாரதி மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். வழக்கம் போல தகராறு அன்றும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாரதி வீட்டை விட்டு சென்றிருக்கிறார். இதனை இவரது மனைவி திவ்யா கண்டுகொள்ளவில்லை. பல நாட்கள் ஆகியும் பாரதி திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பாரதியை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கண்டுபிடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாரதியின் மனைவி திவ்யா மீது போலிசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனடிப்படையில் அவரது மனைவியை அழைத்து போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவள்கள் வெளியாகின .

கீழ் மாந்தூர் ஜெஆர்ஜே நகரை சேர்ந்தவர் டேவிட் என்கிற சதீஷ்குமார். இவர் சாலை விரிவாக்க பணியில் மண் கொட்டும் சூப்பர்வைசராக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கும் பாரதியின் மனைவி திவ்யாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது.

இதனை அறிந்த பாரதி, திவ்யாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து பாரதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அவரது உடலை வீட்டில் இருந்த சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளனர். அதன் பிறகு சதிஷ்குமார் பாரதியின் உடலை மினி வேன் மூலம் தஞ்சாவூர் விக்கிரபாண்டி பகுதியில் சாலை போடும் இடத்திற்க்கு கொண்டுவந்து குழி தோண்டி புதைத்துள்ளார். இதனை அறியாமல் மண் கொட்டப்பட்டுள்ளதாக நினைத்து சாலை போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து திவ்யா மற்றும் சதீஷ்குமார் இருவரையும் போலிசார் கைது செய்தனர். பின்னர் பாரதியின் உடலை புதைக்கபட்ட இடத்திலிருந்து தோண்டி எடுத்து அங்கையே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதனை காண ஏராளமானோர் குவிந்தனர்.

கள்ளகாதலனோடு சேர்ந்து கனவனையே கொன்று புதைத்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்