விருதுநகர்
விருதுநகரில் மின் கம்பம் அருகில் தொலைத்தொடர்பு நிறுவன கம்பங்கள் நடப்பட்டதால் பாதிப்பு
|விருதுநகரில் மின் கம்பம் அருகில் தொலைத்தொடர்பு நிறுவன கம்பங்கள் நடப்பட்டதால் மின் இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
விருதுநகர் முழுவதும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களது தேவைக்காக கம்பங்களை நட்டியுள்ளது. அதிலும் பல பகுதிகளில் மின்கம்பங்களுக்கு அருகிலேயே இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் மின் இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு மின் கம்பங்களில் பழுது ஏற்பட்டால் மின் ஊழியர்கள் இந்தமின்கம்பங்களில் ஏறி பணி செய்வதற்கும் பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறி இந்த கம்பங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை உள்ளது. எனவே இது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து மின்கம்பங்கள் அருகில் நடப்பட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கம்பங்களை அகற்றி மின் இணைப்பிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.