< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில்  சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் சாலாமேடு ஜீவராஜ் நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). இவருடைய மனைவி ஆனந்தி. இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. லாவண்யா, பிரேமா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதால் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். மேலும் அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய காலை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்