< Back
மாநில செய்திகள்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்று பூஜை நேரம் மாற்றம்
மாநில செய்திகள்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்று பூஜை நேரம் மாற்றம்

தினத்தந்தி
|
8 Nov 2022 9:34 AM IST

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்று பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்,

சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைக்கிறது. இதனால் பல்வேறு கோவில்களில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மதியம் 1.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.

மேலும் செய்திகள்