< Back
மாநில செய்திகள்
வீரபாண்டியில்  விபத்தில் கவிழ்ந்த மினி லாரி; டிரைவர் உயிர் தப்பினார்
தேனி
மாநில செய்திகள்

வீரபாண்டியில் விபத்தில் கவிழ்ந்த மினி லாரி; டிரைவர் உயிர் தப்பினார்

தினத்தந்தி
|
8 July 2022 10:49 PM IST

வீரபாண்டியில் விபத்தில் மினி லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்

மதுரையில் இருந்து குளிர்பதன ெபட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கம்பம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 22) ஓட்டி சென்றார். தேனியை சேர்ந்த ராஜா (50) என்பவர் கம்பத்தில் இருந்து லாரியில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். தேனி-கம்பம் சாலையில் வீரபாண்டி புதுப்பாலம் அருகே வந்தபோது லாரி எதிர்பாராதவிதமாக மினி லாரி மீது மோதியது. இதனால் மினி லாரி கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவர் லேசான காயமடைந்து உயிர் தப்பினார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்