< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
|22 Feb 2023 12:15 AM IST
வேதாரண்யத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர பணிக்கு முழு நேர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரனிடம் வழங்கினார்.