< Back
மாநில செய்திகள்
வந்தவாசியில்  இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
3 Sep 2022 6:15 PM GMT

வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது

வந்தவாசி

வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது

வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 32 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

இந்த நிலையில் அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பூஜைக்கு பின்னர் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஆர்.சீனுவாசன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை பா.ம.க. மாவட்ட செயலாளர் அ.கணேஷ்குமார் தொடங்கி வைத்தார். வந்தவாசி அங்காளம்மன் கோவிலிலிருந்து தொடங்கிய ஊர்வலம் சன்னதி தெரு, தேரடி, பஜார்வீதி வழியாக பழைய பஸ் நிலைய பகுதியை சென்றடைந்தது.

அங்கு நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலர் மணலி டி.மனோகர், மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளைச் செயலாளர் ஆறு லட்சுமணன் சுவாமிகள், வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு பூமாலைசெட்டிக்குளத்தை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. இதனையொட்டி டி.ஐ.ஜி. சத்தியப்பிரியா, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வந்தவாசி துணை போலீ்ஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊர்வலப் பாதையில் 32 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்