மதுரை
வாடிப்பட்டி பகுதியில் கடுமையான பனிப்பொழிவு -வாகன ஓட்டிகள் அவதி
|வாடிப்பட்டி பகுதியில் கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. பின் இரவு முழுவதும் சாரல் மழையும் பெய்துகொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை சிறுமலை பகுதியில் மலைமுழுவதும் தெரியாதபடி பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டுநீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பரவியது. இதனால் மதுரை-திண்டுக்கல் தேசிய நான்குவழிச்சாலை மற்றும் வாடிப்பட்டி நகர்புறசாலை முழுவதும் தெரியாதபடி பனி மூட்டம் காணப்பட்டது. இதில் சாலையில் பனி மூட்டம் மறைத்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 7 மணிக்கு சூரியஒளி வந்த பின்னும் 8 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பனி மூட்டத்தை கண்டவர்கள் வாடிப்பட்டி ஊட்டி, கொடைக்கானல் போல் மாறிவிட்டது என்று தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.