< Back
மாநில செய்திகள்
வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில்  மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை
தேனி
மாநில செய்திகள்

வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில் மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை

தினத்தந்தி
|
28 July 2022 9:33 PM IST

வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் வடபுதுப்பட்டி கிளை சார்பில் தலைவர் அரிச்சந்திரன், செயலாளர் ரவிச்சந்திரன், கவுரவ தலைவர் சுருளி, பொருளாளர் விஜயரெங்க பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் அன்னப்பிரகாசிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் வடபுதுப்பட்டி கல்லூரி சாலை முகப்பிலும், பெருமாள் கோவில் முன்புறம் மற்றும் விநாயகர் கோவில் முன்புறம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வடபுதுப்பட்டி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். வடமலைநாயக்கன்பட்டியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்