< Back
மாநில செய்திகள்
உருளைகுடி ஊராட்சியில் ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

உருளைகுடி ஊராட்சியில் ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

உருளைகுடி ஊராட்சியில் ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி (கிழக்கு):

உருளைகுடி ஊராட்சியில் 6 கோடியே 27 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை அமைச்சர் கீதாஜீவன்தொடங்கி வைத்தார்.

உயர்மட்ட பாலம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் உருளைகுடி ஊராட்சியில் பீக்கிலிபட்டி கிராமம் முதல் சங்கராபுரம் கிராமம் வரை நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ்

ரூ.6 கோடியே 27 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு ஜீ.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பாலம் கட்டுமான பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

40 கிராமமக்கள் பயனடைவர்

பின்னர் அமைச்சர் பேசுகையில், கோவில்பட்டி - விளாத்திகுளம் - சாத்தூர் தொகுதியின் எல்கை பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மழைக்காலம் மற்றும் காட்டாற்று வெள்ளத்தின் போது, பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் முன்னேறும் வகையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்கள் எப்போதும் தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும்' என்று பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் யூஜின், தர்மராஜ், பிரேம் சங்கர், லோகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்