< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரிவாள் வெட்டு

தூத்துக்குடி கால்டுவெல்காலனியை சேர்ந்தவர் அழகுபிச்சை. இவருடைய மகன் கிங்ஸ்வின் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது, அங்கு நின்ற மர்ம நபர்கள் கிங்ஸ்வினை வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் கிங்ஸ்வின் மறுத்ததால், அவரை அரிவாளால் சரமாரியாக சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

2 பேர் சிக்கினர்

இதில் காயம் அடைந்த கிங்ஸ்வின் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த உதயகுமார் மகன் சோலையப்பன் என்ற அபினாஷ் (19), தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முருகன் மகன் சூரியபிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் கிங்ஸ்வினை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சோலையப்பன் மீது ஏற்கனவே ஒரு வழக்கும், சூரியபிரகாஷ் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்