< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம்

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம் நடந்தது.

மணிப்பூரில் நடந்து வரும் தாக்குதல் சம்பவத்தையும், மத்திய அரசையும் கண்டித்து தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை கண்டன கூட்டம் திரேஸ்புரம் மேட்டுப்பட்டி சந்திப்பில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் சுலைமான், வக்கீல் அணி அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக பெரியார் மைய காப்பாளர் காசி, ம.தி.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் நக்கீரன், திராவிடர் விடுதலை கழகம் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் மீராசா, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற காக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனோபர் அலி, தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தனராஜ், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட பரப்புரை செயலாளர் கத்தார் பாலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் செய்திகள்