< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு அடி-உதை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு அடி-உதை

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் தாக்கப்பட்டார்.

தூத்துக்குடி சுப்பாநாயக்கர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் சூர்யகாந்த் (வயது 30). ஒப்பந்ததாரர். இவர் தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகம் அருகே உள்ள ஒரு புரோட்டா கடையில் பார்சல் வாங்குவதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக வந்த ஒருவர் கையை உதறி உள்ளார். இதில் கையில் ஒட்டி இருந்த சாப்பாடு சூர்யகாந்த் முகத்தில் தெறித்து உள்ளது. இதனை சூர்யகாந்த் தட்டிக் கேட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர் உள்பட 3 பேர் சேர்ந்து சூர்யகாந்தை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்