< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில்  பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவிய போட்டி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவிய போட்டி

தினத்தந்தி
|
15 Oct 2022 12:15 AM IST

தூத்துக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவிய போட்டி நடந்தது.

போலீஸ் துறையில் பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி 'காவலர் வீர வணக்க நாள்" உறுதி மொழி ஏற்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று 2022-ம் ஆண்டு போலீஸ் துறையில் பணியின் போது வீர மரணமடைந்தவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தன.

கட்டுரை போட்டி மாநில வளர்ச்சியில் 'போலீஸ் துறையின் பங்கு" என்ற தலைப்பிலும், ஓவிய போட்டி 'காவல்துறை கடமைகள்" என்ற தலைப்பிலும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்